/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் இரவில் குப்பைக்கு தீ வைப்பு
/
இளையான்குடியில் இரவில் குப்பைக்கு தீ வைப்பு
ADDED : ஆக 20, 2025 03:10 AM

இளையான்குடி : இளையான்குடி குப்பை கிடங்கிற்கு அருகில் குப்பைக்கு இரவு நேரத்தில் தீ வைப்பதால் ஏற்படும் புகையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகளை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அருகில் உள்ள சமுத்திர ஊரணி அருகே கழிவு நீர் தேங்கி நிற்கும் ஊரணி கரை மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும் சிலர் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சிலர் குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர்.
புகை மூட்டத்தால் ஹவுத் அம்பலம் தெரு, கான்சா, கான் முகமது சந்து, பி.எச்.தெரு, காதர் பிச்சை, சூறாவளி தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.