/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்துாரில் குப்பை வண்டி சிறைபிடிப்பு
/
பள்ளத்துாரில் குப்பை வண்டி சிறைபிடிப்பு
ADDED : ஜூலை 19, 2025 11:46 PM

காரைக்குடி: பள்ளத்துார் பேரூராட்சியில் பொதுமக்கள் வசிக்கும் இடத்தின் அருகில் குப்பை கொட்டுவதாக கூறி குப்பை வண்டிகளை மக்கள் சிறைபிடித்தனர்.
பள்ளத்துார் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, தற்காலிக மற்றும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு, குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லை. இதனால் குப்பை கொட்டுவதில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. குப்பை கிடங்கிற்கு என பேரூராட்சிக்கு இடம் ஒதுக்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் நேற்று காரைக்குடி வடக்கு ஊருணி அருகே குப்பை கொட்ட வந்த வண்டிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்: பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லை. தற்போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை சார்பில், பேரூராட்சிக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள தைல மரங்களை அகற்றிவிட்டு விரைவில் இடத்தை ஒப்படைக்க உள்ளனர்.
அதன்பிறகு எந்த பிரச்னையும் இல்லாமல் குப்பை ஓரிடத்தில் கொட்டி தரம் பிரிக்கப்படும்.

