/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜே.இ.இ., தேர்வில் குளோபல் பள்ளி சாதனை
/
ஜே.இ.இ., தேர்வில் குளோபல் பள்ளி சாதனை
ADDED : பிப் 19, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : 2024 ம்ஆண்டிற்கான ஜே.இ.இ., நுழைவு தேர்வில் சிங்கம்புணரி எம்.கோவில்பட்டி குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 7மாணவர்கள் 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர் விஷால் ஆதித்தியா 95.70, பிரசன்னா 93.21, ஜனனிபிரியா 92.6 சதவீதம் வரை பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இது மட்டுமின்றி ஜே.இ.இ., அட்வான்ஸ் நுழைவு தேர்வுக்கு 12மாணவர்கள் தகுதி பெறறனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் காந்தி, இயக்குனர்கள் ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.

