/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஆடு,கோழி விற்பனை அமோகம்
/
திருப்புவனத்தில் ஆடு,கோழி விற்பனை அமோகம்
ADDED : அக் 23, 2024 06:11 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் தீபாவளியை ஒட்டி நேற்றைய சந்தையில் ஆடு, கோழிகளை விற்பனை செய்யவும் வாங்கவும் ஏராளமானோர் குவிந்தனர்.
திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அதிகாலை ஐந்து மணி முதல் காலை 10:00 மணி வரை கால்நடை சந்தையும் அதன்பின் காய்கறி சந்தையும் நடைபெறும்.
விவசாயிகள் வாரச்சந்தையில் தாங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழி, சேவல் உள்ளிட்டவை நேற்றைய சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு ஏழாயிரம் ரூபாயில் இருந்து ஒன்பதாயிரம் ரூபாயாகவும், ஒன்றரை கிலோ எடை கொண்ட கோழி 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், ஒன்றரை வயது சண்டை சேவல் இரண்டாயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.

