/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழியில் நின்ற அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
/
வழியில் நின்ற அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
ADDED : ஆக 21, 2025 06:55 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து கொத்தமங்கலம் சென்ற அரசு பஸ் திடீரென்று பழுதானதால் நடுவழியில் பயணிகள் இறக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று காலை 6:00 மணிக்கு திருப்புத்துாரிலிருந்து கொத்தமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் எண் 2ஏ பயணிகளுடன் புறப்பட்டது.
அரையிட்டானேந்தல் அருகே பஸ் ஆக்சில் முறிந்து பிரேக் டவுன் ஆகி நின்றது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பஸ்சை விட்டு இறக்கப்பட்டனர். நடுவழியில் இறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் புலம்பியபடி இறங்கினர்.
அடுத்து வந்த அரசு பஸ்சில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பணியாளர்கள் வந்து பஸ்சை பல மணிநேரத்திற்கு பராமரித்த பின்னர் பஸ் டெப்போவிற்கு சென்றது.