/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு வங்கியில் வேலை ரூ.18 லட்சம் மோசடி * போலீசார் விசாரணை
/
அரசு வங்கியில் வேலை ரூ.18 லட்சம் மோசடி * போலீசார் விசாரணை
அரசு வங்கியில் வேலை ரூ.18 லட்சம் மோசடி * போலீசார் விசாரணை
அரசு வங்கியில் வேலை ரூ.18 லட்சம் மோசடி * போலீசார் விசாரணை
ADDED : மே 01, 2025 01:08 AM
சிவகங்கை:சிவகங்கையில் அரசு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே காளையார்கோவில் சிலையா ஊரணியைச் சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன் 40. இவர் சென்னையில் தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவருக்கு இளையான்குடி அருகே கொங்கம்பட்டி திருவழகு மகன் செந்தில்முருகன் அறிமுகமானார். செந்தில்முருகன் தனது நண்பர்கள் பானுசந்தர், பார்த்தசாரதி மத்திய அரசு வங்கியில் உயர் பதவியில் இருப்பதாகவும் அவர்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக வெங்கடேசனுக்கு உறுதி அளித்தார். அதை நம்பிய வெங்கடேசன், சித்தப்பா தேரடியான் மகன் கோபிநாத் என்பவருக்கும் மேலும் இரண்டு நபர்களான திருச்சியை சேர்ந்த ஆரோக்கியசாமி, திருநெல்வேலியை சேர்ந்த அருண்பாண்டியனுக்கும் சேர்த்து 2023 ஜன.,27 முதல் மே 23 வரை ரூ.10 லட்சத்தை செந்தில்முருகனின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் செந்தில் முருகன் கூறியதன் பேரில் பானுச்சந்தர், பார்த்தசாரதி மற்றும் பல்வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.20 லட்சத்தை பல்வேறு தேதிகளில் அனுப்பினார். நேரடியாக செந்தில்முருகன் வீட்டிற்கே சென்று ரூ.3 லட்சம் கொடுத்தார். ஆனால் வேலை வாங்கித்தராமல் செந்தில்முருகன் ஏமாற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். செந்தில்முருகன் ரூ.15 லட்சத்தை மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூ.18 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றினார். வெங்கடேசன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் செந்தில்முருகன், பானுசந்தர், பார்த்தசாரதி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.