/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் : ரூட், நேரம் மாற்றி இயக்குவதால் கிராம மக்கள்...பாதிப்பு
/
சிங்கம்புணரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் : ரூட், நேரம் மாற்றி இயக்குவதால் கிராம மக்கள்...பாதிப்பு
சிங்கம்புணரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் : ரூட், நேரம் மாற்றி இயக்குவதால் கிராம மக்கள்...பாதிப்பு
சிங்கம்புணரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் : ரூட், நேரம் மாற்றி இயக்குவதால் கிராம மக்கள்...பாதிப்பு
ADDED : ஆக 16, 2025 02:38 AM

மதுரை, மேலுார், நத்தம், திருப்புத்துார், பொன்னம ராவதி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக டெப்போக்களில் இருந்து சிங்கம்புணரிக்கு அரசு பஸ்கள் இயக்கப் படுகின்றன.
இங்குள்ள அரசு, தனியார் பள்ளிகள், கல் லூரிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் இந்த டவுன் பஸ்களையே நம்பி உள்ளனர். ஆனால் பல பஸ்கள் சிங்கம்புணரியை புறக் கணிக்கும் விதமாக ரூட்டை கட் செய்வதுடன், நேரம் மாற்றி இயக்கப் படுவதால் பாதிப்பு ஏற் படுகிறது.
நத்தம் டெப்போவில் இருந்து சிங்கம்புணரிக்கு 2 அரசு டவுன் பஸ்கள் தினமும் தலா 8 முறை இயக்கப்பட்ட நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு இப்பேருந்துகள் சரிவர வருவதில்லை. அப்படியே வந்தாலும் முன் கூட்டியோ, தாமதமாகவோ வருகின்றன.
இதனால் திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி, மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டி, மணப்பச்சேரி, கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து இங்கு வரும் மாணவர்கள், தனியார் பேருந்துகளில் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டி உள்ளது.
இதேபோல் திருப்புத்துார் டெப்போவில் இருந்து இயக்கப்படும் 10 ம் நம்பர் டவுன் பஸ் பொன்னமரா வதியில் இருந்து காலை 7:25 மணிக்கு பதிலாக 7:00 மணிக்கே புறப்படுவதால் எஸ்.புதுார் ஒன்றிய மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மதியம் 1:00 மணிக்கு சிங்கம் புணரியில் இருந்து வேங்கைப்பட்டி, உரத்துப்பட்டி வழியாக பொன்ன மராவதி செல்வதற்கு பதிலாக ரூட்டை மாற்றி நத்தம் சென்று விடுகிறது. இதனால் வேங்கைப்பட்டி பகுதி மக்கள் நடந்தே ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.
பொன்னமராவதி டெப்போவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 4 அரசு பஸ்களும் குறித்த நேரத்தை விட முன் கூட்டியே சென்று விடு வதால் எதிர்பார்த்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த ஒன்றியமாக சிங்கம்புணரி இருந்தும் இப் பகுதியை டெப்போ மேலாளர்களும், ஓட்டு நர்களும் புறக் கணிப்பதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பி.செந்தில்குமார், சமூக ஆர்வலர், சிங்கம்புணரி: இங்குள்ள பள்ளி கல்லூரி களுக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் மாணவர்கள் வந்து செல்கின்றனர். அரசு டவுன் பஸ்களை முறையான நேரத்திற்கு இயக்காமல் தனியார் பஸ்களுக்கு சாதக மாக நேரத்தையும், ரூட்டையும் மாற்றி இயக்கு வதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் ஏழை மாணவர்கள் காத் திருந்து தனியார் பஸ்களில் டிக்கெட் எடுத்துச்சென்று வர வேண்டி உள்ளது.
இப்பிரச்னை தீர சிங்கம்புணரியில் தனியாக பஸ் டெப்போ அமைப்பது ஒன்றுதான் தீர்வு என்றாலும், அதுவரை அனைத்து டெப்போ மேலாளர்களும் சிங்கம்புணரிக்கு வரும் பேருந்துகளை ரூட் மாற்றாமல் குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்.
பஸ் டெப்போக்கள் வெவ்வேறு மாவட்டங்களில் இருப்பதால் இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை. தொகுதி அமைச்சர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி உரிய நேரத்தில் அனைத்து பஸ்களும் இயக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், என்றார்.