/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
/
பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
பென்ஷன் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 12, 2025 03:40 AM
சிவகங்கை: பென்ஷன் திட்டம் குறித்து முடிவு செய்ய சென்னையில் ஆக., செப்.,ரில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசுக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன், பங்களிப்பு பென்ஷன், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் இவற்றில் எந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை பெற அரசின் நிதித்துறை முடிவு செய்துள்ளது.
நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரும், பென்ஷன் ஆலோசனை கமிட்டி தலைவருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆக., 18, 25 மற்றும் செப்., 1, 8 ல் நடக்கவுள்ளது.
நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பென்ஷன் திட்டம் குறித்து முடிவு செய்ய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் கருத்தை பொறுத்து அடுத்த கட்ட முடிவை மாநில அரசு எடுக்கும். இதுதொடர்பான புகார்களை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ''pensioncommittee,findpt@tn.gov.in'' என்ற இ- மெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.