ADDED : அக் 02, 2024 06:53 AM
சிவகங்கை : தொழிற்சங்கம் அமைக்க முயற்சிக்கும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா தலைமை வகித்தார். தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை ஆற்றினர். மாவட்ட துணை தலைவர்கள் பாண்டி, கார்த்திக், இணை செயலாளர் பயாஸ் அகமது, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி சாலை பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் சதுரகிரி பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் சாம்சங் தொழிற்சாலையை சட்டப்படி பதிவு செய்ய வலியுறுத்தியும், தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தியும் சி. ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வீரையா தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.