/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத கட்டடத்தில் அரசு மருத்துவமனை; அச்சத்துடன் சிகிச்சை பெறும் கானாடுகாத்தான் மக்கள்
/
பராமரிப்பில்லாத கட்டடத்தில் அரசு மருத்துவமனை; அச்சத்துடன் சிகிச்சை பெறும் கானாடுகாத்தான் மக்கள்
பராமரிப்பில்லாத கட்டடத்தில் அரசு மருத்துவமனை; அச்சத்துடன் சிகிச்சை பெறும் கானாடுகாத்தான் மக்கள்
பராமரிப்பில்லாத கட்டடத்தில் அரசு மருத்துவமனை; அச்சத்துடன் சிகிச்சை பெறும் கானாடுகாத்தான் மக்கள்
ADDED : ஜூன் 26, 2025 10:26 PM

கானாடுகாத்தான் பேரூராட்சியில் அரசு பொது மருத்துவமனை பல ஆண்டுகளாக சாலையின் இருபுறம் எதிரெதிரே இரு கட்டடங்களில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு கானாடுகாத்தான் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பிரசவ அறை, ஆப்பரேஷன் தியேட்டர், காய்ச்சல் பிரிவு அவசரசிகிச்சை பிரிவு, வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவு செயல்படுகின்றன.
செட்டிநாடு முறைப்படி பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டடத்தில், மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆனால் கட்டடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. சுற்றுப்புற சுவர்கள் ஆங்காங்கே இடிந்து காணப்படுவதோடு, சுவர்களில் செடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் கட்டடம் இடியும் அபாய நிலையில் உள்ளது. தவிர உள்நோயாளிகளின் அறை, கழிப்பறை சேதம் அடைந்து கிடப்பதோடு போதிய மருத்துவர்கள் இல்லை என புகார் எழுந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த அழகப்பன் கூறுகையில்: கானாடுகாத்தான் அரசு மருத்துவமனை பராமரிப்பு இல்லை. சேதமடைந்து கிடக்கும் நோயாளிகள் அறை, கழிப்பறைகளால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பிணவறை இடிந்து விட்டது. உள்நோயாளிகளுக்கு காலை வேளையில் உணவு முறையாக வழங்கப்படுவதில்லை. போதிய டாக்டர்கள் இல்லை. ரத்தப் பரிசோதனை மையம் செயல்படுவதில்லை.
தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருந்தது. டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் தற்போது 3 டாக்டர்கள் பணியில் உள்ளனர். மருத்துவமனை கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பராமரிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் கட்ட டம் சரி செய்யப்படும்.