/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
/
திருப்புவனத்தில் பார் ஆக மாறும் அரசு அலுவலகம்
ADDED : ஜூன் 23, 2025 07:37 AM
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டு மது அருந்துவதுடன் பாட்டில்களையும் உடைத்து போடுவதால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் தாசில்தார் குடியிருப்பு, வேளாண் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன. இவை உரிய பாதுகாப்பு வசதியின்றி உள்ளன. குறிப்பாக சுற்றுச்சுவர், வாட்ச்மேன் இல்லை. இதனால் இரவில் குடிமகன்கள் பலரும் மது பாட்டில்களுடன் வந்து மது அருந்தும் பாராக மாறி வருகிறது. மேலும் மதுபாட்டில்களை உடைத்து போட்டு செல்வதால், அரசு ஊழியர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
///