/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாராக மாறிவரும் அரசு அலுவலகம் ஊழியர்கள் அவதி
/
பாராக மாறிவரும் அரசு அலுவலகம் ஊழியர்கள் அவதி
ADDED : மே 23, 2025 12:16 AM

காரைக்குடி: சாக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வட்டார புள்ளியியல் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.
அரசு மற்றும் மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக, மக்கள் தொகை, சுகாதாரம், கல்வி, விலைவாசி, தொழில், விவசாயம், வர்த்தக விவரங்கள் உள்ளிட்டவற்றை தொகுத்து வழங்கும் பணியினை புள்ளியியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வட்டார புள்ளியியல் ஆய்வாளர் அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் ஏதும் இல்லாததால் இரவு நேரங்களில் மது குடிப்பவர்கள் இப்பகுதியில் அமர்ந்து குடிக்கின்றனர்.
கட்டடத்தை சுற்றி காலி மது பாட்டில் நிரம்பி காணப்படுகிறது. பணிக்கு செல்வோர் அச்சமடைகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.