/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடுதி மாணவர்களுக்கு 'நீட்' ஜே.இ.இ., புத்தகம் பிளஸ் 2 மாணவர்கள் வரவேற்பு

ADDED : நவ 23, 2024 02:27 AM
சிவகங்கை:பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் மாணவர் விடுதிகளில் 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போட்டி தேர்வுக்கென வினா-விடை புத்தகம் வழங்குவதை மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் பிற்பட்டோருக்கு 563, மிக பிற்பட்டோருக்கு 342, சீர்மரபினருக்கு 133, சிறுபான்மையினருக்கு 4 மாணவர் விடுதிகள் என மாநில அளவில் 1042 மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இவர்கள் 'நீட்' மற்றும் ஜே.இ.இ., போட்டி தேர்வு எழுதுவதற்கு ஏற்ப 'நீட்' ஜே.இ.இ., போட்டி தேர்வுக்கான மாதிரி வினா-விடை புத்தகங்கள் வழங்க பிற்பட்டோர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு விடுதிக்கும் தலா 5 'நீட்' மற்றும் ஜே.இ.இ., வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.