ADDED : மே 04, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் முனிசிபல் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி மாதவி 64. இவர் ஏப். 15 ஆம் தேதி கதவை பூட்டிவிட்டு தனது மகனைப் பார்க்க தஞ்சாவூர் சென்றுள்ளார்.
இவரது, வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாதவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ 10. ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.