/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் பராமரிப்பில்லாததால் குடியிருப்பு; மீண்டும் மராமத்து செய்து வாடகைக்கு விடப்படுமா
/
தேவகோட்டையில் பராமரிப்பில்லாததால் குடியிருப்பு; மீண்டும் மராமத்து செய்து வாடகைக்கு விடப்படுமா
தேவகோட்டையில் பராமரிப்பில்லாததால் குடியிருப்பு; மீண்டும் மராமத்து செய்து வாடகைக்கு விடப்படுமா
தேவகோட்டையில் பராமரிப்பில்லாததால் குடியிருப்பு; மீண்டும் மராமத்து செய்து வாடகைக்கு விடப்படுமா
ADDED : மே 31, 2024 06:20 AM

தேவகோட்டையில் அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் வசதிக்காக நகரின் முக்கிய பகுதியான ராம்நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அரசு அலுவலர்களுக்கு முதல் கட்டமாக 60 அடுக்குமாடி வீடுகளும் அதனைத் தொடர்ந்து கூடுதலாக 60 என 120 அடுக்குமாடி வாடகை வீடுகளும் கட்டப்பட்டன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆழ்துளை கிணறுகள் மூலம் 24 மணி நேர குடிநீர் வசதி தனித்தனி மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன.
இதன் காரணமாக வீடுகள் காலியாவதற்கு முன்பே அரசு அலுவலர்கள்தகவல் அறிந்து விண்ணப்பித்து உடனடியாக குடியேறி வந்தனர். ஒரு வீடு கூட ஒரு நாளும் காலியாக இருந்தது இல்லை.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் நான்கு வீடுகளில் மட்டும் அரசு அலுவலர்கள் குடியிருக்கின்றனர். 115 வீடுகள்காலியாக உள்ளன. அரசுக்கு வாடகையாக வர வேண்டிய வருவாய் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஊழியர்கள் யாரும் வசிக்காததால் வீடுகள் நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. சில வீடுகள்பூட்டி இருந்தாலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது. சில வீடுகளில் வாசலில் விளக்குகள் எரிந்த வண்ணம் உள்ளன.
சமூக விரோதிகள் யாரும் உள்ளே சென்று விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் கீழ் படிகளில் முட்களை போட்டும், தேவையில்லாத கழிவுகளை போட்டு அடைத்து வைத்து உள்ளனர். சமீபத்தில் தான் புதிய தார் ரோடும் போடப்பட்டுஉள்ளது.
இங்கு வசித்த பலர் ஓய்வு பெற்று வெளியேறி விட்டனர். மேலும் அரசு வழங்கும் வீட்டு வாடகைப்படியோடு வாடகை கூடுதலாக வசூலிப்பதால், அரசு ஊழியர்கள் குடி வர தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் புதிய பணியாளர்கள் நியமனம் இல்லாததும் ஒரு காரணமாகும்.
அனைத்து வீடுகளிலும் சிறு சிறு மராமத்து செய்து புதுப்பித்து மீண்டும் அரசு அலுவலர்களுக்கு வாடகைக்கு விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.