/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டாகுடியை மீட்டால் குடியேறுவோம்
/
நாட்டாகுடியை மீட்டால் குடியேறுவோம்
ADDED : ஆக 26, 2025 03:46 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டாகுடியில் பாதுகாப்பு, விவசாயத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுத்தால் மீண்டும் குடியேற தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சியின் கீழ் உள்ள நாட்டாகுடியில் 10 ஆண்டுக்கு முன் வரை 150 குடும்பத்தினர் வரை வசித்தனர். வறட்சியால் விவசாயம் செய்ய போதிய நீரில்லாத காரணத்தால் படிப்படியாக குடும்பத்துடன் இடம் பெயர்ந்து விட்டனர்.
கடந்த 2 ஆண்டுக்கு முன் வரை 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தனர். அங்கு தொடர்ந்து 3 கொலை சம்பவம் வரை நடந்ததால், அச்சத்தில் எஞ்சிய குடும்பத்தினரும் ஊரையே காலி செய்துவிட்டு வெளியேறினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு பழுதாகி இருந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து கொடுத்தனர். 35 வீடுகளில் உள்ள குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதோடு, மக்களின் பாதுகாப்பிற்கென 5 இடங்களில் 'சி.சி.டி.வி., கேமராக்கள்' பொருத்தி, அவற்றை திருப்பாச்சேத்தி போலீசார் கண்காணிக்கும் விதமாக ஆன்லைன் மூலம் இணைத்துள்ளனர்.
அடிப்படை வசதி களான குடிநீர், மின்விளக்கு வசதி செய்து கொடுத்ததால், படிப்படி யாக நாட்டாகுடி கிராமத்தில் மீண்டும் குடிபெயரும் முடிவுக்கு அக்கிராம மக்கள் வந்துள்ளனர். இதன் முன்னோட்டமாக நேற்று காலை நாட்டாகுடியில் உள்ள 4 குலதெய்வங்கள் முன் அக்கிராமத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட பெண்கள் வழிபாடு நடத்தினர்.
அரசு தொடர்ந்து அடிப்படை வசதிகள், அச்சுறுத்த லில் இருந்து பாதுகாப்பு அளித்தால், அனைத்து குடும்பத்தினரும் மீண்டும் நாட்டா குடியில் குடி யேறுவோம் என தெரிவித்தனர்.
நாட்டா குடியை சேர்ந்த வசந்தி கூறிய தாவது:
கடந்த பல ஆண்டாக இக்கிராமத்தில் குடும்பத்துடன் வசித்தோம். தொடர் கொலை, அடிப்படை வசதி இல்லாத காரணத்தால், அருகில் உள்ள படமாத்துாருக்கு இடம் பெயர்ந்தோம்.
தற்போது தான் நாட்டாகுடியில் அடிப்படை வசதி களை செய்து கொடுத்து உள்ளனர். அதேபோன்று விவசாயம் செய்ய ஏதுவான வகையில் கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களை துார்வாரி, மழைக்காலங்களில் உப்பாறு ஆற்றில் இருந்து தடையின்றி நாட்டார் கண்மாய்க்கு மழை நீர் வரும் விதத்தில் வரத்து கால்வாய்களை துார்வாரிதர வேண்டும். தந்தால் விவசாயத்தை நம்பியுள்ள 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீண்டும் நாட்டாகுடிக்குள் குடியேறுவார்கள்.
குலதெய்வத்தை வணங்குவதற்காக வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை திருப்பாச்சேத்தி போலீசார் உறுதி செய்ய வேண்டும், என்றார்.