/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செயல் அலுவலர் இல்லாத இளையான்குடி பேரூராட்சி
/
செயல் அலுவலர் இல்லாத இளையான்குடி பேரூராட்சி
ADDED : நவ 24, 2024 07:34 AM
இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அலுவலகப் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இளையான்குடி பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல் அலுவலராக பணியாற்றி வந்த கோபிநாத் இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதத்திற்கு மேலாகியும் இதுவரை செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் நாட்டரசன் கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள சண்முகம் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
பேரூராட்சி கவுன்சிலர் நாகூர் மீரா மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போது மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல், தொற்று பரவி வரும் நிலையில் பிரதான கழிவு நீர் வாய்க்கால் அடைபட்டு கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் மழை நீரோடு கழிவு நீர் சேர்ந்து தெருக்களில் ஓடி வருகிறது.
பேரூராட்சி மக்கள் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றால் செயல் அலுவலர் இல்லை என்று ஊழியர்கள் கூறி விடுகின்றனர்.
பிளான் அப்ரூவல் மற்றும் குடிநீர் சம்பந்தமான பிரச்னைகள், திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இளையான்குடி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.