/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்களில் விதிமீறி மண் எடுப்பு
/
கண்மாய்களில் விதிமீறி மண் எடுப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:59 AM
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பாசனக் கண்மாய்களில், விதிமீறி கிராவல் மணல் எடுக்கப்பட்டதால் மடைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் நிலவுகிறது.
மாவட்டம் முழுவதும் சிறு பாசன கண்மாய்களின் கொள்ளளவை மீட்டெடுக்க, நிலத்தடி நீர்மட்டத்தைஅதிகரிக்க வேண்டும். அதன்படி சாக்கோட்டை ஒன்றியத்தில் 40 கண்மாய்களில் ரூ.4.35 கோடி மதிப்பில் கண்மாய் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. அதில், தி.சூரக்குடி ஆண்டியேந்தல் கண்மாயில் ரூ.7.57 லட்சத்தில் சீரமைப்பு பணி நடக்கிறது. இங்கு விதியை மீறி பணிகள் நடந்துள்ளதால், மடை வழியே தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படும். மேலும் கண்மாய்களில் தேங்கிய நீரை பருக வரும் கால்நடைகளும் பாதிக்கப்படும். அந்தளவிற்கு கண்மாய்க்குள் வீதிமீறி கிராவல் மண் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சாக்கோட்டை பி.டி.ஓ., ராஜேஷ்குமார் கூறியதாவது, கண்மாய் கரையில் இருந்து 10 மீட்டருக்கு அப்பால் தான் துார்வார வேண்டும். ஆனால் 3 மீட்டர் தூரத்தில் கிராவல் மண் எடுத்துள்ளனர். புகாரின் பேரில் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.