/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிற்சி புத்தகம் வழங்காததால் பாதிப்பு
/
பயிற்சி புத்தகம் வழங்காததால் பாதிப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:22 AM
சிவகங்கை: சிவகங்கையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் வழங்காததால் மாணவர்கள் கற்றல் திறன் பாதிப்பு அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எண்ணும், எழுத்து பயிற்சி புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில் 1 முதல் 3ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு மட்டும் பயிற்சி நுால் வழங்கப்படும்.
4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பயிற்சி நுால்கள் வழங்கப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் நிலையில் தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.