/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இந்தோ திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மைய துவக்க நாள் விழா
/
இந்தோ திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மைய துவக்க நாள் விழா
இந்தோ திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மைய துவக்க நாள் விழா
இந்தோ திபெத் பாதுகாப்பு படை பயிற்சி மைய துவக்க நாள் விழா
ADDED : அக் 25, 2025 04:18 AM

சிவகங்கை: இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மையத்தில் 64 வது துவக்க நாள் விழா நடந்தது.
இந்திய திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை துவக்கப்பட்டு, நேற்று 64 வது நாள் விழா நடந்தது. இலுப்பக்குடியில் உள்ள இப்பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தலைமையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பயிற்சியில் சேர்ந்துள்ள வீரர்களுக்கு இப்பாதுகாப்பு படையின் சாதனைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
பயிற்சி மைய வளாகத்தில் யோகா மற்றும் மரம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
அரசின் சாதனை குறித்த பிரசாரத்தில் வெற்றிபெற்ற குழந்தைகள், பெண்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் பரிசு வழங்கினார்.