/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலத்தில் டிரைவர் கொலை குடும்பத்தாரிடம் அமைச்சர் பேச்சு மறியலை கைவிட்ட மக்கள்
/
தாயமங்கலத்தில் டிரைவர் கொலை குடும்பத்தாரிடம் அமைச்சர் பேச்சு மறியலை கைவிட்ட மக்கள்
தாயமங்கலத்தில் டிரைவர் கொலை குடும்பத்தாரிடம் அமைச்சர் பேச்சு மறியலை கைவிட்ட மக்கள்
தாயமங்கலத்தில் டிரைவர் கொலை குடும்பத்தாரிடம் அமைச்சர் பேச்சு மறியலை கைவிட்ட மக்கள்
ADDED : அக் 25, 2025 04:17 AM

சிவகங்கை: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் டிரைவர் சங்கர் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும்கைது செய்வதாகவும், சொந்த நிதியில் ரூ.10 லட்சம் தருவதாக அமைச்சர் பெரியகருப்பன் உறுதி அளித்ததால் மறியலை கைவிட்டு சென்றனர்.
இளையான்குடி அருகே கண்ணமங்கலம் முத்தழகு மகன் டிரைவர் சங்கர் 29. அக்., 21 அன்று இரவு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆர்ச் முன் நடுரோட்டில் நிறுத்தியிருந்த டூவீலரை எடுத்துவிட்டு, சங்கர் தனது காரில் கடந்து சென்றார். இது தொடர்பாக சங்கருக்கும், தாயமங்கலம் பாண்டி மகன் செல்வக்குமார் 28, என்பவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
அன்றைய தினம் 8 பேர் கொண்ட கும்பல் சங்கரை வெட்டி கொலை செய்தது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்களை குண்டர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, சங்கரின் உடலை வாங்காமல் நேற்று 3 வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். நேற்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 12:00 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, எஸ்.பி., சிவபிரசாத், கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அமைச்சர் ரூ.10 லட்சம் நிதி இறந்த சங்கரின் குடும்பத்தாரிடம் அமைச்சர் பேசும் போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனது சொந்த நிதியில் இருந்து சங்கரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் தருவதாக தெரிவித்தார். இதையடுத்து மதியம் 12:20 மணிக்கு மறியலை கைவிட்டு சென்றனர். 5 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக தாயமங்கலத்தை சேர்ந்த ரவி மகன் முத்துவேல் 23, பாண்டி மகன் செல்வகுமார் 32, முத்து மகன் பிரேம்குமார் 23, ஆகிய மூவரையும் அக்., 22 ல் இளையான்குடி போலீசார் கைது செய்திருந்தனர். மேலும் இளையான்குடி போலீசார் இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தாயமங்கலம் வீரதுரை மகன் முத்துமணி 26, முருகேசன் மகன் சரண்குமார் 19 ஆகிய இருவரையும் கைது செய்து, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

