/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமத் ஜெயந்தி மஹோத்சவம் துவக்கம்
/
அனுமத் ஜெயந்தி மஹோத்சவம் துவக்கம்
ADDED : ஜன 05, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி செக்காலை சந்தான கணபதி, சஞ்சீவி ஆஞ்சநேய பக்த சபா சார்பில் அனுமத் ஜெயந்தி மஹோத்ஸவம் நேற்று ஆஞ்சநேயர் ஆலயத்தில் துவங்கியது.
ஜன. 12ம் தேதி வரை விழா நாட்களில் மாலை 5:30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஸகஸ்ர நாம அர்ச்சனை, மாலை 6:30 மணிக்கு காரைக்குடி செக்காலை சங்கர மணி மண்டபத்தில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடை பெறுகிறது.
தினமும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடை மாலை, ஸகஸ்ர நாம அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.