/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
/
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டடம் திறப்பு
ADDED : மார் 06, 2024 06:44 AM
காரைக்குடி : காரைக்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதிநேர அலுவலக புதிய கட்டட திறப்பு விழா நடந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கட்டடத்தை திறந்து வைத்தனர். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையேற்றார். மாங்குடி எம்.எல்.ஏ., போக்குவரத்து துறை ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆர்.டி.ஓ., பால்துரை, வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார்
சாக்கோட்டை சேர்மன் சரண்யா, காரைக்குடி நகராட்சி சேர்மன் முத்துத்துரை, ஊராட்சி தலைவி தேவி, மாவட்ட கவுன்சிலர் ராதா, ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், தேவி மீனாள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்:
போக்குவரத்து துறை நெருக்கடி நிறைந்த துறை. கொரோனா காலங்களில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையால் பல வழித்தடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. கும்பகோணம் நவக்கிரக கோயில்களை சுற்றி பார்க்க ஒரே பேருந்து இயக்கப்படுகிறது. அதே போல் சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலய வழித்தடங்களை ஆய்வு செய்து சிறப்பு பேருந்து இயப்படும் என்றார்.

