/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
/
யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி விழா துவக்கம்
ADDED : டிச 01, 2024 11:57 PM

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் கூடிய சம்பக சஷ்டி விழா நேற்று தொடங்கியது.
குன்றக்குடி ஆதினத்தை சேர்ந்த இக்கோயிலில் பைரவர் சன்னதியில் வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை சம்பக சஷ்டி காலமாக கருதப்படுகிறது. இதற்காக நேற்று காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ யாகம் துவங்கியது. சிவாச்சாரியார்கள் பைரவர், ரமேஷ், பாஸ்கரன் ஆகியோர் யாக பூஜைகளை நடத்தினர்.
யாகசாலையில் இருந்த கலசங்கள் புறப்பட்டு, பைரவர் சன்னதியில் சேர்த்தனர். அங்கு 16 வித திரவியங்களால் அபிேஷகம் செய்தனர். சந்தனக்காப்புடன் வெள்ளி கவசத்தில் பைரவர் எழுந்தருளினார். நேற்று மாலை 4:30 மணிக்கு அஷ்ப பைரவயாகம் துவங்கி, இரவில் சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெற்றது.
தினமும் காலை மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்து, டிச., 6 ல் சம்பக சஷ்டி விழாவுடன் நிறைவு பெறும். விழா குழுவினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.