/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் குயிலிக்கு சிலை திறப்பு
/
சிவகங்கையில் குயிலிக்கு சிலை திறப்பு
ADDED : அக் 10, 2024 05:42 AM

சிவகங்கை : சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரர் குயிலிக்கு ரூ.50 லட்சம் செலவில் கட்டிய சிலை திறப்பு விழா நடந்தது.
சிவகங்கை அருகே ராகிணிபட்டியில் வேலுநாச்சியார் மணி மண்டப வளாகத்தில், குயிலிக்கு அரசு சார்பில் ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்பட்டது.
இச்சிலையை நேற்று முதல்வர் ஸ்டாலின் 'வீடியோ கான்பிரன்சிங்' முறையில் திறந்து வைத்தார்.
இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் பெருமாள்சாமி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆதி தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் பெரியார் ராமு, ஆதிதிராவிடர் நல விழிப்பு, கண்காணிப்பு குழு கூட்டமைப்பு மாநில தலைவர் பூமிநாதன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., உமாராணி, (ஊராட்சி) பழனியம்மாள், சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சி தலைவர் மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

