/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
/
திருப்புவனத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
திருப்புவனத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
திருப்புவனத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 08, 2025 05:31 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று வழியை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தில் ஆண்கள், பெண்கள்பள்ளி, தனியார்மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என ஏராளமானவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐயாயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
இதுதவிர மருத்துவம், விவசாய இடுபொருட்கள், விளைவித்த பொருட்கள்உள்ளிட்டவைகளை விற்பனை செய்யவும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். நான்கு வழிச்சாலையில் அமைந்துஉள்ள நகர் என்பதால் பலரும் திருப்புவனம் வந்து பஸ் ஏறி, இறங்கி செல்கின்றனர்.
நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினசரி இரண்டு போக்குவரத்து போலீசார் நியமனம் செய்யப்பட்டும் நெரிசல் தீரவே இல்லை.ஏழு மீட்டர் அகலம் கொண்ட சாலை நகர்ப்பகுதிக்குள் ஐந்தரை மீட்டராவது இருக்க வேண்டும், சாலையின் இருபுறமும் டுவீலர்கள், கார்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று வழி காண வேண்டும், திருப்புவனத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கு மதுரையில் இருந்துதான் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன.
காலை நேரத்தில் வரிசையாக கடைகளுக்கு சரக்குகள்இறக்க வேன், லாரி உள்ளிட்டவைகள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆயிரம் வாகனங்கள் சென்று வந்த இடத்தில் ஐயாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
பொதுமக்கள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுழற்சி முறையில் ஒரே பக்கமாக டூவீலர், கார்களை நிறுத்தலாம், வேலை நேரமான காலை 8:00 முதல் 10:00, மதியம் 3:00 முதல் 6:00 மணி வரை ரோட்டில் லாரிகளை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்க கூடாது, உச்சிமாகாளியம்மன் கோயில் வீதியில் இருபுறமும் டூவீலர் பழுது பார்க்கும் இடங்கள் உள்ளன. இவற்றிற்கு வரும் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி பழுது பார்க்கின்றனர். மற்ற டூவீலர்கள் செல்ல கூட பாதை இல்லை.
எனவே உச்சிமாகாளியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். காலை மற்றும்மாலை நேரங்களில் ரயில்வே கேட் திறக்கப்படும்போது ஒரே நேரத்தில்100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நரிக்குடி ரோட்டில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரிதவிக்கின்றனர்.
இதற்கு தீர்வாக நரிக்குடி ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும், நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தவேண்டும், குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

