/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.37.37 கோடியில் வளர்ச்சி பணி மாவட்ட கவுன்சிலில் தகவல்
/
ரூ.37.37 கோடியில் வளர்ச்சி பணி மாவட்ட கவுன்சிலில் தகவல்
ரூ.37.37 கோடியில் வளர்ச்சி பணி மாவட்ட கவுன்சிலில் தகவல்
ரூ.37.37 கோடியில் வளர்ச்சி பணி மாவட்ட கவுன்சிலில் தகவல்
ADDED : டிச 25, 2024 08:16 AM
சிவகங்கை : மாவட்ட ஊராட்சி கவுன்சில் மூலம் கடந்த 5 ஆண்டில் பொது நிதி ரூ.37.37 கோடியில் வளர்ச்சி பணிகள் செய்துள்ளதாக சிவகங்கையில் நடந்த கடைசி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்ட கவுன்சில் கூட்டம் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் சரஸ்வதி அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி செயலாளர் கலைசெல்வராஜன் வரவேற்றார். மூத்த மாவட்ட கவுன்சிலர்கள் கருப்பையா, ராமசாமி, தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் செந்தில் உட்பட 16 மாவட்ட கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சில் மூலம் கடந்த 5 ஆண்டில் பொது நிதியில் ரூ.37.37 கோடிக்கு பணிகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய கூட்டத்தில் ஒரு கவுன்சிலுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.4.80 கோடியில் அடிப்படை வசதிகளை செய்யவும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடம் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பேசியதாவது: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் காவிரி- குண்டாறு- வைகை இணைப்பு திட்டத்திற்கு ரூ.1,753 கோடியை முன்னாள் முதல்வர் பழனிசாமி ஒதுக்கினார். அந்த திட்டம் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகங்கையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

