/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்
/
சிங்கம்புணரி, எஸ்.புதுாரில் வளர்ச்சி பணி துவக்கம்
ADDED : மார் 09, 2024 08:22 AM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி தாலுகாவில் அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.,க்கள் ப.சிதம்பரம், கார்த்தி வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தனர்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சிங்கம்புணரி பகுதியை அரசியல் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வலம் வருகின்றனர்.
நேற்று அமைச்சர் பெரியகருப்பன் எஸ்.புதுார் ஒன்றியத்தில் நாகமங்கலம், இடையபட்டி, வலசைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்மாற்றிகள், பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட திட்டங்களை திறந்து வைத்தார். அதே வேளையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோர் சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட மகாத்மா காந்தி நுாலகத்தை திறந்து வைத்தனர்.

