/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் வழங்கும் இயந்திரம் துவக்கி வைப்பு
/
குடிநீர் வழங்கும் இயந்திரம் துவக்கி வைப்பு
ADDED : பிப் 16, 2024 05:27 AM
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி சார்பில் அரசு மருத்துவமனை அருகில் நகராட்சி பொதுநிதி ரூ. 7 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் திறந்து வைத்தார்.
கவுன்சிலர் நிரோஷா 5 ரூபாய் காசை இயந்திரத்தில் செலுத்தி 20 லிட்டர் தண்ணீர் பிடித்து செல்லும் திட்டத்தை துவக்கி வைத்தார். கமிஷனர் பார்கவி, துணைத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இந்த இயந்திரத்தில் ஒரு ரூபாய் நாணயம் போட்டால் ஒரு லிட்டர் குடிநீரும், இரண்டு ரூபாய் நாணயம் போட்டால் 5 லிட்டர் குடிநீரும், ஐந்து ரூபாய் நாணயம் போட்டால் 20 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
மேலும் கைலாசநாதபுரம், காந்தி ரோடு பகுதி இரண்டு இடத்திலும் தலா ரூ நான்கு லட்சத்தில் இரண்டு சிறு ஆழ்துளை கிணறு அமைத்து தொட்டி மூலம் குடிநீர் வழங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.
அழகாபுரி நகரில் மையின்ஸ் திட்டத்தில் ரூ 14 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டடத்தை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் திறந்து வைத்தார். கமிஷனர் பார்கவி, துணை தலைவர் ரமேஷ், பொறியாளர் மீராஅலி, அய்யப்பன், கமலக்கண்ணன், தனலட்சுமி உட்பட கவுன்சிலர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.