திருப்புவனம்: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் மற்றும் திருப்புத்துார் வட்டாரத்தில் வளர்ச்சி பணிகள் நடக்கிறது.
கரும்பு விவசாயிகளுக்கு கரும்பில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி திருப்பாச்சேத்தியில் நடந்தது. தொடர்ந்து கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் ஆய்வகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற 33 விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்ட திட்டமேலாளர் அருமை ரூபன்ஜோசப், புத்தாக்க நிறுவன பயிற்றுனர் சங்கரலிங்கம், அழகப்பா பல்கலை கழக மகளிரியல் துறை மாணவிகள் பங்கேற்றனர்.

