ADDED : அக் 01, 2024 05:35 AM
சிவகங்கை : காரைக்குடி அம்மன் சன்னதி தெருவில் வைர நகைக்கடை உள்ளது. 2000 நவ., 28 இரவு 8:00 மணிக்கு சாக்கோட்டை செல்லக்கண்ணு மகன் மணி 59, புதுவயல் வீரகுமார் 54, மித்ரா வயல் ஹரிஹரன் 55, கருநாவல்குடி சின்னப்பன் 74, சாக்கோட்டை கருப்பையா 54, சாக்கோட்டை குமார் 56, ஆறுமுகம், செல்லப்பாண்டி, ஆகியோர் கடையில் இருந்தவர்களை தாக்கி ரூ.74 லட்சம் நகைகளை திருடி சென்றனர்.
மணி, வீரகுமார், ஹரிஹரன், சின்னப்பன், கருப்பையா, குமார், ஆறுமுகம், செல்லப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். வழக்கு சிவகங்கை சார்பு நீதிமன்றத்தில் நடக்கும் போது மணி இறந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சாய் சுந்தர் ஆஜரானார்.
வீரகுமார், ஹரிஹரன், சின்னப்பன், கருப்பையா, குமாருக்கு 7 ஆண்டு சிறையும் ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி சாண்டில்யன் உத்தரவிட்டார். ஆறுமுகம், செல்லப்பாண்டி விடுவிக்கப்பட்டனர்.