/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கரும்பு விலை உயர்வால் ஜூஸ் விலையும் உயர்ந்தது
/
கரும்பு விலை உயர்வால் ஜூஸ் விலையும் உயர்ந்தது
ADDED : ஜூலை 03, 2025 03:22 AM
காரைக்குடி: காரைக்குடியில், கரும்பு வரத்து குறைந்ததோடு கரும்பு விலை இரு மடங்காக உயர்ந்ததால் கரும்புச்சாறு ரூ 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள் பல்வேறு குளிர் பானங்களை தேடி பருகினாலும் அதில், பலரும் விரும்புவது கரும்புச்சாறாகும். காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் ரோடு, கல்லூரி சாலை உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கரும்புச்சாறு கடைகள் உள்ளன.
தற்போது கரும்பு வரத்து குறைந்துள்ளதோடு விலையும் இரு மடங்கானதால், ரூ.15 முதல் 20 க்கு விற்பனை செய்யப்பட்ட கரும்பு சாறு ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வியாபாரிகள் கூறுகையில்:
கரும்பு டன்னுக்கு ரூ.6 முதல் 7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக ஒரு டன் ரூ.10 முதல் 12 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அதனால் கரும்புச் சாரும் ரூ.25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது.