ADDED : அக் 18, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த முருகையா மகன் தனசேகரன் 25, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் திலீப்குமார் 21, என்பவருக்குமிடையே கபடி போட்டி நடத்துவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
திலிப்குமார் மற்றும் கதிரேசன்,லோகு, கேசவன்,சண்முகவேல்,சுந்தரி,நாகலிங்கம், ஏலம்மாள் ஆகியோர் தனசேகரன், ராமு,இந்துராணி ஆகியோரை தாக்கியதில் காயம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் மேற்கண்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.