/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளிகோயில் அறங்காவலர் நியமன சர்ச்சை: கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
/
காளிகோயில் அறங்காவலர் நியமன சர்ச்சை: கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
காளிகோயில் அறங்காவலர் நியமன சர்ச்சை: கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
காளிகோயில் அறங்காவலர் நியமன சர்ச்சை: கிராம மக்கள் கலெக்டரிடம் புகார்
ADDED : செப் 24, 2024 07:01 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் அறங்காவலர் குழு நியமனத்தில் பாரபட்சம் காட்டுவதாக கிராமத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் கொல்லங்குடி அருகேயுள்ள அரியாக்குறிச்சியில் வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிேஷகம் செப்., 8ம் தேதி நடந்தது. செப்., 7ல் இக்கோயிலுக்கு அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் இருவர் என 3 பேரை ஹிந்து அறநிலையத்துறை நியமித்தது.
இக்கோயிலில் 1985ம் ஆண்டில் இருந்தே அறங்காவலர் குழு தலைவர், 4 உறுப்பினர்கள் என 5 பேர் இருந்து வந்தனர். 2009ம் ஆண்டு வரை அதுவே நடைமுறை.
அதிலும் ஒரு உறுப்பினர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவராக நியமிக்கப்பட்டார். அவர்களின் பதவிக்காலம் முடிந்தபின் அறங்காவலர் குழுவே நியமிக்கப்படவில்லை.
செப்., 7 ம் தேதி நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவில் தலைவர், உறுப்பினர் 2 பேர் என 3 பேர் மட்டுமே நியமித்துள்ளனர். இதில், ஒருவர் கூட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்த்தவர் இல்லை.
ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி 5 பேரை நியமித்து, அதில் ஒரு ஆதிதிராவிடருக்கு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும், கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 8 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்களை மட்டுமே அறங்காவலர் குழுவில் நியமிக்க வேண்டும். அந்த விதிகளும் மீறப்பட்டுள்ளதாக அரியாக்குறிச்சி கிராமத்தினர் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.
3 பேர் தான்...
ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி கூறியதாவது: கொல்லங்குடி கோயிலுக்கு தலைவர் உட்பட 3 பேர் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதிலும், ஆதிதிராவிடருக்கு உறுப்பினர் பதவி தர வேண்டும் என விதியில் இல்லை. ஏற்கனவே அறங்காவலர் குழுவில் 5 பேரை நியமித்தது, தவறுதலாக நடந்துள்ளது என்றார்.