
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,:
தேவகோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பன் விழா தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமநாதன் வரவேற்றார். கந்த சஷ்டி விழா கழக தலைவர் வீரப்பன், பொருளாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். பேராசிரியை விசாலாட்சிக்கு விருது வழங்கப்பட்டது.
நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கம்பன் கழக நிர்வாகிகள் வக்கீல் சங்கர், உமாபதி, லட்சுமணன், கண்ணப்பன், சரவணன், சீனிவாசன், பாலசுப்பிரமணியன், குமார், ஆசிரியை ஜோதி, கவிஞர் சபாரத்தினம், கனவு தாசன் பேசினர். தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

