/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டா வரச்சொல்லுங்க... சிவகங்கையில் போஸ்டர் யுத்தம்
/
கண்டா வரச்சொல்லுங்க... சிவகங்கையில் போஸ்டர் யுத்தம்
கண்டா வரச்சொல்லுங்க... சிவகங்கையில் போஸ்டர் யுத்தம்
கண்டா வரச்சொல்லுங்க... சிவகங்கையில் போஸ்டர் யுத்தம்
ADDED : பிப் 29, 2024 11:47 PM

சிவகங்கை, - தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு போட்டியாக தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக்கூட்டணியை களத்திலேயே காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க என்று பதிலுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கண்டா வரச் சொல்லுங்க என குறிப்பிட்டு பல இடங்களில் பொதுவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை சமூக வலை தளங்களிலும் பரப்பி வருகின்றனர்.
இதில் எங்கள் தொகுதி எம்.பி.யை காணவில்லை கண்டா வரச் சொல்லுங்க என்றும் என்னை தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறியவரை கண்டா வரச் சொல்லுங்க.. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வோம் என்ற சின்னவரை கண்டா வரச் சொல்லுங்க என பல வகையான மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு போட்டியாக தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக்கூட்டணியை களத்திலேயே காணவில்லை கண்டா வரச் சொல்லுங்க என்ற போஸ்டரும் மாவட்டம் முழுவதிலும் ஒட்டி அதனை சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.

