/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிருஷ்ண ஜெயந்தி விழா: மாட்டு வண்டி பந்தயம்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா: மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஆக 11, 2025 03:53 AM

சிவகங்கை: சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
3 பிரிவுகளாக நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரியமாட்டு பிரிவில் 11 ஜோடி, நடுமாடு பிரிவில் 16 ஜோடி, சிறியமாட்டு பிரிவில் 16 ஜோடிகளும், 15 குதிரை வண்டிகள் பங்கேற்றன.
இந்த வண்டிகள் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்தன. பெரிய மாடு பிரிவிற்கு 8 கி.மீ., துாரமும், நடுமாடு பிரிவிற்கு 6 கி.மீ., சிறிய மாடு பிரிவிற்கு 5 கி.மீ., துாரமும், குதிரைக்கு 8 கி.மீ., துாரமும் பந்தய எல்லைகளாக வைத்திருந்தனர்.
போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த மாடு மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர், அதை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு வழங்கினர்.