/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துவராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
முத்துவராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 04, 2025 05:16 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மகா முத்து வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
வேங்கைப்பட்டி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இக்கோயிலில் ஜன. 31 ஆம் தேதி மகா கணபதி வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. ஐந்து கால பூஜை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10:20 மணிக்கு கோயில் விமானம் மற்றும்பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஸ்ரீ மகா முத்து வராகி அம்மன்திருக்கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார், சாந்தி குமார சுவாமிகள்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.