ADDED : செப் 04, 2025 11:40 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் காட்டாம்பூர் தர்மபுல்லணி அய்யனார் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
ஆக.29ல் கணபதி ேஹாமம், நவக்ரஹக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜை களும், செப்.1ல் முதற்கால யாக பூஜை துவங்கி யது. யாகசாலை பூஜைகளில் அமைச்சர் பெரிய கருப்பன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.
நேற்று அதிகாலை ஆறாம்கால யாக பூஜையை சிவாச்சார்யாரிகள் துவங்கினர். காலை 10:02 மணிக்கு கலச புனித நீரால் விமான,கோபுரங்களுக்கு பிச்சைக்குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தினார்.
குன்றக்குடி பொன்னம் பல அடிகள், துளாவூர் ஆதினம், ஆ.பி.சீ.அ. கல்லுாரி துணைத் தலைவர் ராமேஸ்வரன் பங்கேற்றனர்.
சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.
சிங்கம்புணரி சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி தேவி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. செப். 3 மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கி இரண்டு கால பூஜையாக நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. 10:30 மணிக்கு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தேவி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. யாகம், கும்பாபிஷேக பூஜைகளை உமாபதி சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
சாலைக்கிராமம் சாலைக்கிராமம் செல்வ விநாயகர் மற்றும் முத்து மாரியம்மன் கோயில் திருப்பணி முடிந்ததைத் தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சப்த கன்னிகா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 10:20 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பா பிஷேகத்தை நடத்தினர்.
முன்னதாக சாலைக்கிராமத்தில் உள்ள மஸ்ஜிதே இலாகி பள்ளிவாசலை சேர்ந்தவர்களும், ஜமாத் நிர்வாகிகளும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோயிலுக்கு வந்து கும்பா பிஷேகத்திற்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.