நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: நெற்குப்பை அரசமரத்து வயிரவ சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபி ஷேகம் நடந்தது.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜை நிறைவுற்று நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி விமான கலசத்தில் புனித நீரால் கும்பாபிேஷகம் நடந்தது.
*எஸ்.புதுார் அருகே புழுதிபட்டி வில்லி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக. 28 ம் தேதி காலை 9:00 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதிவுலா நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.