/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிகளில் பணி செய்த துாய்மை பணியாளர்கள் 8 மாதமாக சம்பளம் வழங்காததால் மாணவிகள் பாதிப்பு
/
பள்ளிகளில் பணி செய்த துாய்மை பணியாளர்கள் 8 மாதமாக சம்பளம் வழங்காததால் மாணவிகள் பாதிப்பு
பள்ளிகளில் பணி செய்த துாய்மை பணியாளர்கள் 8 மாதமாக சம்பளம் வழங்காததால் மாணவிகள் பாதிப்பு
பள்ளிகளில் பணி செய்த துாய்மை பணியாளர்கள் 8 மாதமாக சம்பளம் வழங்காததால் மாணவிகள் பாதிப்பு
ADDED : அக் 04, 2024 04:40 AM
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்க பள்ளிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமும், நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மூலம் பணி செய்யும் துாய்மை பணியாளர்களுக்கு மேல்நிலைப் பள்ளியில் 4 ஆயிரமும், உயர்நிலை பள்ளியில் 3ஆயிரமும், நடுநிலை பள்ளிகளில் 2ஆயிரமும், துவக்க பள்ளிகளில் ரூ.1500ம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 8 மாதங்களுக்கும்மேலாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் அவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வரவில்லை. கழிப்பறை நாற்றமெடுப்பதை தொடர்ந்து மாணவர்கள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் வேறு வழியின்றி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் கழிப்பறையை சொந்த செலவில் சுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவிகள் பயன்படுத்தும் நாப்கின்களை எரியூட்டுவதற்காக அரசு 2019ம் ஆண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் எரியூட்டும்இயந்திரம் வழங்கி உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அந்த இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் நாப்கின்களை அப்புறப்படுத்த முடியாமல் மாணவிகளும்,ஆசிரியைகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பெற்றோர்கள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக அரசு பள்ளிகளில் சரியான முறையில் கழிப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தினால் கழிப்பறைக்கு செல்லாமல் அடக்கி கொண்டு மாணவர்கள் வீடுகளுக்கு வந்து கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு வித நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை தினம்தோறும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்பவர்களுக்கு கடந்த 8 மாத காலத்திற்கும் மேலாக சம்பளம் கொடுக்காத காரணத்தினால் அவர்கள்வேலைக்கு வருவது கிடையாது. இதனால் கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வேறு வழியின்றி நாங்களும் ஆசிரியர்களும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது:
கழிப்பறைகளை சுத்தம்செய்பவர்களுக்கு சம்பளம்வழங்கப்படாதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அவர் விரைவில் துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் என்றார்.