/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நில அடுக்கு திட்ட செயல்பாடு கூட்டம்
/
நில அடுக்கு திட்ட செயல்பாடு கூட்டம்
ADDED : ஆக 28, 2025 04:53 AM
காரைக்குடி : காரைக்குடியில் மத்திய அரசின் நில அடுக்கு திட்டத்தின் முன்னோட்ட செயல்பாடு குறித்த சிறப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலை சுற்றுலா மாளிகைக் கூட்டரங்கில்,மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக நில வளத்துறை உயர்மட்ட குழுத் தலைவர் சொக்கலிங்கம்,கலெக்டர் பொற்கொடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட், நில அளவை கூடுதல் இயக்குனர் வெங்கடேசன்,உதவி இயக்குனர் பழனி கார்த்திகை குமரன், காரைக்குடி மாநகராட்சி ஆணையர் சங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய நில வளத்துறை உயர்மட்ட குழுத் தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில்: பொதுமக்கள் தங்களின் நிலங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அனைத்து தகவல்களையும் டிஜிட்டல் முறையில் உடனடியாக பெறவும், மின்னணு முறையில் மத்திய அரசால் நில அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில் நிர்வாகத்தை நெறிப்படுத்துதல், வெளிப்படைதன்மை அதிகரித்தல், உண்மையான நிலப்பதிவுகளை உறுதி செய்தல் நோக்கமாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் சண்டிகரில் மத்திய அரசின் நில அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் காரைக்குடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 25 முதல் 30 துறைகள் ஒருங்கிணைத்து பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
6 மாதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இணையதளம் வழியாக ஒரு பட்டனை அழுத்தினால் துறைகள் மற்றும் குடிமக்கள் நிலம் சம்பந்தமான தகவல்களை பார்க்க முடியும்.