ADDED : ஜன 07, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீல்கள்நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் பாதுகாப்புச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சேமநலநிதியை தற்போதுஉள்ள ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும். அதுவரை நீதிமன்ற முத்திரை கட்டணத்தை ரூ.120 ஆக உயர்த்தியதை நிறுத்தி வைத்து தற்போதைய கட்டணமான ரூ.30 மட்டுமே தொடர வேண்டும்.
தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் ஜானகிராமன் தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
செயலாளர் சித்திரைச்சாமி, பொருளாளர் வல்மீகநாதன், துணை செயலாளர் நிருபன்சக்கரவர்த்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.