/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழுநோய் கண்டறியும் கணக்கெடுப்பு பணி தன்னார்வலர்களுக்கு சம்பளம் இழுபறி
/
தொழுநோய் கண்டறியும் கணக்கெடுப்பு பணி தன்னார்வலர்களுக்கு சம்பளம் இழுபறி
தொழுநோய் கண்டறியும் கணக்கெடுப்பு பணி தன்னார்வலர்களுக்கு சம்பளம் இழுபறி
தொழுநோய் கண்டறியும் கணக்கெடுப்பு பணி தன்னார்வலர்களுக்கு சம்பளம் இழுபறி
ADDED : செப் 27, 2025 04:09 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வீடுகள் தோறும் தொழுநோய் கண்டறியும் சர்வே பணியில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் விடுவிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்தியாவை 2027 ம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லாத நாடாக மாற்றும் நோக்கில், அந்தந்த மாவட்டங்களில் வீடு தோறும் தொழுநோய் கண்டறியும் முகாம் நடத்தி, தொற்று இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 20 வீட்டிற்கு ஒரு தன்னார்வலர் வீதம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக., மாதத்தில் கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு ரூ.1,050 சம்பளம் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு 120 முதல் 150 தன்னார்வலர்கள் வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கு நபருக்கு ரூ.1,050 வீதம் சம்பளம் விடுவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான தன்னார்வலர்களுக்கு இந்த சம்பளம் விடுவிக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அக்., முதல் வாரத்தில் சம்பளம் துணை இயக்குனர் (தொழுநோய்) கவிதா ராணி கூறியதாவது; தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறியும் கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் விடுவிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த ஆண்டில் 4 தவணையாக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனால் தன்னார்வலர்களின் வங்கி கணக்கிற்கே சம்பளத்தை வழங்கும் நோக்கில், சம்பள கணக்கை மாற்றியுள்ளனர். இதனால் விடுபட்டவர்களுக்கு அக்., முதல் வாரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றார்.