/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1388 கோடி கடன் வழங்கல்
/
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1388 கோடி கடன் வழங்கல்
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1388 கோடி கடன் வழங்கல்
கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1388 கோடி கடன் வழங்கல்
ADDED : நவ 18, 2024 07:55 AM
சிவகங்கை : கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பாண்டு ரூ.1,388 கோடி வரை கடன் அளித்துள்ளனர்.
மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 439 சங்கங்கள் செயல்படுகின்றன. இச்சங்கங்கள் மூலம் 34 விதமான கடனுதவிகள் வழங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ரூ.1388 கோடி கடன்களாக வழங்கியுள்ளனர்.
குறிப்பாக 87,828 விவசாயிகளுக்கு ரூ.530.15 கோடி பயிர் கடன், 33,904 பேர்களுக்கு ரூ.178.63 கோடி கால்நடை பராமரிப்பு கடன், 3.86 லட்சம் பேர்களுக்கு ரூ.2,623 கோடி நகை கடன், 3,916 மகளிர் குழுக்களுக்கு ரூ.278.56 கோடி கடன், 2,303 பேர்களுக்கு ரூ.7.97 கோடி சிறு வணிக கடன், 720 பேர்களுக்கு ரூ.7.18 கோடி மத்திய கால கடன், 241 பேர்களுக்கு ரூ.4.24 கோடி தானிய கடன், 905 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.57 கோடி கடன் அளித்துள்ளனர்.
கூட்டுறவு வார விழாவில் மட்டுமே 1,483 பயனாளிகளுக்கு ரூ.10.52 கோடி கடன் அளித்துள்ளனர்.