/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதம் தண்ணீர் திறக்க முடியாமல் தவிப்பு
/
மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதம் தண்ணீர் திறக்க முடியாமல் தவிப்பு
மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதம் தண்ணீர் திறக்க முடியாமல் தவிப்பு
மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதம் தண்ணீர் திறக்க முடியாமல் தவிப்பு
ADDED : நவ 04, 2025 04:11 AM

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் கண்மாயில் மடைகள் சேதமடைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
30 ஏக்கர் பரப்பளவுள்ள மடப்புரம் கண்மாயை நம்பி ஆயிரம் ஏக்கரில் தென்னை, நெல், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து மடப்புரம் கண்மாய்க்கு தண்ணீர் வரும், மடப்புரம் கண்மாய் நிரம்பிய பின் ஏனாதி, தேளி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மடப்புரம் கண்மாயில் பாசனத்திற்கு திறக்க ஐந்து மடைகள் கட்டப்பட்டுள்ளன . முண்டு கற்களால் கட்டப்பட்ட இந்த மடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. கண்மாயில் இருந்து பாசனத்திற்கு மடைகள் மூலம் திறக்க ஷட்டர்களை ஏற்றி இறக்க முடியவில்லை. மடைகள் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால் ஷட்டர்களை இயக்கும் போது முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை பல இடங்களில் பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை, வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரைத்தான் கண்மாயில் நிரப்ப முடியும், மடைகள் சேதமடைந்திருப்பதால் தண்ணீரை நிரப்பினாலும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மடப்புரம் கண்மாயில் உள்ள ஐந்து மடைகளையும் சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

