/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 31 பேர் காயம்
/
மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 31 பேர் காயம்
ADDED : மே 13, 2025 07:49 AM

திருப்புத்தூர் : திருப்புத்துார் அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், 350 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 31 பேர் காயமுற்றனர்.
நேற்று காலை கிராமத்தினர் தெய்வ வழிபாட்டிற்கு பின் ஊர்வலமாக தொழுவிற்கு வந்து காலை 10:30 மணிக்கு காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
277 காளைகளை நேற்று மதியம் 1:30 மணி வரை அவிழ்த்தனர். இதில் 150 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுகள் முட்டியதில் பார்வையாளர்கள் உட்பட 31 பேர் காயமுற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு தங்க காசு, பாத்திரம் பரிசாக வழங்கினர். இது தவிர காலை முதலே வயலில் கட்டுமாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.