/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பு இல்லாத சிவகங்கை தெப்பக்குளம்
/
பராமரிப்பு இல்லாத சிவகங்கை தெப்பக்குளம்
ADDED : டிச 23, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் பராமரிப்பின்றி கழிவு நீர், குப்பைகள் கலக்கும் குளம் போல் காட்சி அளிக்கின்றன.
சிவகங்கை கவுரிவிநாயகர் கோயில் எதிரே, 5 ஏக்கரில் நகராட்சி தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து கால்வாயில் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கின்றன.
இது தவிர குப்பைகளை தெப்பக்குளத்தில் கொட்டுவதால் கழிவு நீர் குளம் போல் காட்சி அளிக்கின்றன. நகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதோடு, வரத்து கால்வாயில் கலக்கும் கழிவுநீரினை விடும் வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.