/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
/
அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
ADDED : ஆக 28, 2025 04:52 AM
சிங்கம்புணரி, : கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்தவர் கலைவாணன், 35. ஹிந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.
ஆக. 27ம் தேதி இரவு காரில் கோவில்பட்டி விலக்கில் பேரிக்கார்டை கடந்த போது, எதிரே அரசு பஸ் மோதுவது போல் வந்துள்ளது. இதனால் கலைவாணனுக்கும், பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருதிப்பட்டி அருகே நின்ற அரசு பஸ் முன் கலைவாணன் காரை நிறுத்தி ஏன் இடிப்பது போல் வந்தீர்கள் என்று டிரைவரிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. டிரைவர் பஸ்சை எடுத்து சென்றபோது காரில் மோதியுள்ளது.
ஆத்திரமடைந்த கலைவாணன் கல்லை எடுத்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்தார். இது சம்பந்தமாக இரு தரப்பும் சதுர்வேதமங்கலம் போலீசில் புகாரளித்தனர். கலைவாணன் கைது செய்யப்பட்டார்.பஸ் டிரைவர் கருப்பையா 45, கண்டக்டர் சரவணராஜன் 46 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.