/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீசாரை தாக்கி தப்ப முயன்றவருக்கு கை, கால் முறிவு
/
போலீசாரை தாக்கி தப்ப முயன்றவருக்கு கை, கால் முறிவு
போலீசாரை தாக்கி தப்ப முயன்றவருக்கு கை, கால் முறிவு
போலீசாரை தாக்கி தப்ப முயன்றவருக்கு கை, கால் முறிவு
ADDED : டிச 05, 2024 11:17 PM

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒய்யவந்தானில் போலீசாரை தாக்கி பாலத்திலிருந்து குதித்து தப்ப முயன்றவருக்கு கை கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காளையார்கோவில் எஸ்.ஐ., குகன் மற்றும் போலீசார் நேற்று காலை 6:00 மணிக்கு கொல்லங்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி டூவீலரில் சென்ற இருவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள் மானாமதுரை மூங்கில் ஊருணியைச் சேர்ந்த சதுரகிரி மகன் துரைசிங்கம் 23, சுப்பிரமணி மகன் லட்சுமணன் 21, என்பதும், நவ., 27 காளையார்கோவில் அருகே புரசடைஉடைப்பு பகுதியில் டூவீலரில் சென்ற 38 வயது பெண்ணின் 7 பவுன் செயினை வழிப்பறி செய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொருவரான சிவகங்கை கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேதுபதி மகன் குட்ட சங்கர் 29, கொல்லங்குடி அருகே ஒய்யவந்தான் பகுதியில் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குட்டசங்கரை போலீசார் ஒய்யவந்தான் பகுதியில் தேடினர். போலீசாரை கண்டதும் குட்டசங்கர் வாளால் எஸ்.ஐ., குகனை தாக்க முயன்றார். போலீசார் விரட்டியதில் குட்டசங்கர் ஒய்யவந்தான் அருகே பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சி செய்ததில் அவருக்கு வலது கை, வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை கைது செய்த போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.